தன்னைப் பற்றி பரவும் தப்பான ட்ரோல்கள் குறித்து மனம் திறந்த நடிகை வாணி போஜன்

By krithika · 9/12/2024

தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரோல்கள் குறித்தும், ஆபாசமாக வரும் கமெண்ட்களை குறித்தும் நடிகை வாணி போஜன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் வாணி போஜன். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து இவர் மாடலிங் வேலையை செய்து இருந்தார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்க தொடங்கினார் வாணி.

இவர் ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வாணி. மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. தற்போது வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார்.

வாணி போஜன் நடித்த படங்கள்:

அந்த வகையில் இவர், ஓ மை கடவுளே, லாக்கப், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரல், லவ், அஞ்சாமை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஒரு சில தெலுங்கு படங்களில் கூட நடித்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் கேசினோ, ஆர்யன், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரு சில வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார்.

வாணி போஜன் பேட்டி:

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வாணி போஜன் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்கள் குறித்தும் ஆபாச புகைப்படங்கள்ச் சித்தரிப்பது குறித்தும் பேசி இருக்கிறார். அதில், நான் நடிச்ச எல்லா நடிகர்களோடவும் என்னை தவறாக தொடர்பு படுத்திப் சோசியல் மீடியாவில் பேசுறாங்க. என்னோட பக்கத்தில் நின்ற போட்டோகிராஃபரையும் என்னையும் கூட சேர்த்து வச்சு தப்பா பேசுறாங்க.

வதந்திகள் குறித்து:

அதோடு அந்த போட்டோகிராஃபருக்கும் எனக்கும் திருமணம் ஆயிருச்சுன்னு கூட சொன்னாங்க. பாவம் அந்த போட்டோகிராஃபர்க்கு இன்னமும் கூட திருமணம் ஆகவில்லை. அவங்க குடும்பம் இப்போ என்னை திட்டுகிட்டு இருக்காங்க. அது மட்டும் இல்லாமல் நான் சமூக வலைதளங்களில் போன்ற போட்டோவை பார்த்துட்டு 'வாய்ப்புக் கிடைக்கல போல, ஆடை குறையக் குறைய வாய்ப்பு அதிகமாக வரும்' என்றெல்லாம் கேவலமாக கமெண்ட் பண்றாங்க.

ஆபாசமாக சித்தரிப்பது குறித்து:

மேலும், ஒரு நடிகையாக நம்மள பிரபலமாக வச்சிக்க விதவிதமாக போட்டோக்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்றோம். ஆனால் அந்தப் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வைரலாக்குவதையே வேலையா வச்சிருக்காங்க. ஒருவரை ட்ரோல் செய்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. இவையெல்லாம் நடிகைகளுக்கு மட்டும் தான் நடக்கும். நடிகர்களை யாரும் ட்ரோல் செய்ய மாட்டார்கள் என்று ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full