வாணிஶ்ரீயின் மகன் உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா? அதுவும் இந்த பிரச்சனையா?

By Rajkumar · 31/5/2020

தென்னிந்திய சினிமா திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 1970 ஆண்டுகளில் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து உள்ளார். பிறகு இவர் 1980 ஆம் ஆண்டு டாக்டா்.கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் சிறிது காலம் விலகி இருந்தாா். இவருக்கு இரு மகன் மற்றும் இரு மகள் உள்ளனர். மேலும், கடந்த வாரம் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வாணிஸ்ரீ மகன் தான் அபிநய வெங்கடேஷ். இவர் பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி உள்ளார். அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு 36 வயது தான் ஆகிறது. அபிநய வெங்கடேஷ்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநய வெங்கடேஷ் மனைவியும் மருத்துவர் தான். இவரின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அபிநய் மரணம் குறித்து அவருடைய தந்தை கருணாகரனிடம் கேட்டபோது அவருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு வந்ததாகக் கூறினார். அதனால் தான் அபிநய் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். ஆனால், கருணாகரன் சொன்னது பொய் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது. அபிநய் சில வருடங்களாகவே மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் அவர் மதுவுக்கு அடிமையாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அவன் தற்கொலை செய்து கொள்வது நம்பர மாதிரியே இல்லை என்றும் கூறினார்கள்.

எப்பவுமே ஆனூர் பங்களாவுக்கு போகாமல் இருந்த வாணிஸ்ரீ இப்போது மகன் இறந்த பிறகு அந்த பங்களாவுக்கு போய் இருப்பதாக தெரியவருகிறது. அபிநய் மனைவி, பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். அபிநய் இறப்பு குறித்து வாணிஸ்ரீயிடம் கேட்டதற்கு அவர் இயல்பாக பேசினார். விதி முடிந்துவிட்டது அவன் போய்விட்டான் என்று சொல்லியிருந்தார். அபிநய் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மற்றபடி பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்த பிறகுதான் அபிநய் இறப்பிற்கு முழு காரணம் தெரியும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full