வசந்த மளிகை பட புகழ் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலையா? ஷாக்கிங் புகைப்படம்.

By Rajkumar · 23/5/2020

தென்னிந்திய சினிமா திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 1970 ஆண்டுகளில் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர். இவர் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து உள்ளார்.

இணையத்தில் அபிநய வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதாக பரவும் புகைப்படம்

பிறகு இவர் 1980 ஆம் ஆண்டு டாக்டா்.கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் சிறிது காலம் விலகி இருந்தாா். இவருக்கு இரு மகன் மற்றும் இரு மகள் உள்ளனர். சிறிது இடைவெளிக்கு பின்பு இவர் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை வாணிஸ்ரீ மகன் தான் அபிநய வெங்கடேஷ். இவர் பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார். மேலும், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வந்த செய்தியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தற்போது 36 வயது தான் ஆகிறது. அபிநய வெங்கடேஷ்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநய வெங்கடேஷ் மனைவியும் மருத்துவர் தான். திரை உலகில் அபிநய மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறகு இவரின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full