40 பென்ச் மார்க்கில் 4 கூட பண்ணல, எவன்டா சொன்னது - பிரஸ்மீட்டில் கொந்தளித்த வனிதா விஜயகுமார்
சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.
வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
வனிதா குறித்த தகவல்:
இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா அவர்கள் அலார்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா தாத்தா, சேகர் சேதுராமன், சூசன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு நிகழ்வு நடைபெற்றிருந்தது.
விழாவில் வனிதா:
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை வைத்து படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் வனிதா, பிரஜன் உட்பட பலர் பங்கு பெற்றிருக்கிறார்கள். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வனிதா, பொதுவாகவே பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு என்று தான் படங்கள் வந்திருக்கிறது. இங்கு நிறைய பேர் பெண் என்ற அடையாளத்தை பயன்படுத்தி தவறுகளுமே செய்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. என் வாழ்க்கையில் நானே எத்தனையோ பெண்களை இதுபோல் சந்தித்து இருக்கிறேன்.
பெண்கள் பற்றி சொன்னது:
அப்போது எல்லாம் எனக்கு கோபம் நிறைய வரும். பெண்களாக இருந்தாலும் தப்பு பண்ணினால் தண்டனை கிடைக்கும். இந்த சமூகத்தில் பெண்களை உயர்த்தி பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறை நாம் தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் ஒரு நல்ல மெசேஜை சொல்லி இருக்கோம். இது பெண்களுக்கு எதிரான படம் கிடையாது. ஆனால், பெண்கள் மேல் இருக்கும் தப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பேசி இருந்தார். இவரை தொடர்ந்து கயல் சீரியல் நடித்த சரவணன் வேலு, நாட்டில் 99.9 சதவீத பெண்கள் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். மீதி 0.001 சதவீதம் பெண்கள் தான் கெட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த பெண்களின் செயல்கள் தான் எல்லோருக்குமே கெட்ட பெயர் வருகிறது.
https://www.youtube.com/watch?v=J5LgNLkgRW4
திருமணம் பற்றி சொன்னது
சமீபத்தில் கூட திருமணம் ஆன ஒருத்தரோட போட்டோ போட்டு என்று அவர் பேசும்போது செய்தியாளர் ஒருவர் வனிதா பண்ணினா சரி, நான் பண்ணா தப்பா என்று பேசி இருந்தார். இதைக் கேட்ட வனிதா, எவன்டா அவன் சொன்னது. நான் 40 கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கேன். நான் நாலு கூட இன்னும் பண்ணல. என்ன பென்ச் மார்க்கே இன்னும் வரவில்லை. அதுக்குள்ள என்ன அசிங்கப்படுத்துவீங்களா? என்று நக்கலாக சிரித்துக் கொண்டே பேசி இருக்கிறார். பின் அந்த நடிகர், நான் அதை சொல்லவில்லை. வனிதா எப்படிப்பட்டவர் என்பது அவர் உடன் பழகியவர்களுக்கு தான் தெரியும். இவர் அன்பானவர். சோசியல் மீடியாவில் ஆயிரம் சொல்லலாம். ஆனால், அதெல்லாம் உண்மை கிடையாது என்று மழுப்பி பேசி இருந்தார்.