நிரூபித்தால் நான் சினிமாவை விட்டு போறேன் - சவால் விட்ட நடிகை வனிதா விஜயகுமார்

By ·

விமர்சகர்களுக்கு நடிகை வனிதா விஜயகுமார் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது இவர் சினிமா, சீரியல், நிகழ்ச்சிகள், பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார். தற்போது இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.

இந்த படத்தை இவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்த படத்தை தயாரித்ததாக ஜோதிகா ஏற்கனவே பேட்டியில் கூறி இருந்தார். இந்த படத்தில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண், ஆர்த்தி கணேஷ், கணேஷ், தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம்:

இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. அதோடு இந்த படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த படம் வெளியானபோது இந்த பாடலை தன்னிடம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தி இருந்தார்கள் என்று இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

படம் பற்றி சர்ச்சை:

இது தொடர்பாக வனிதாவும் பல பேட்டிகள் கொடுத்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தினுடைய காட்சிகள் பட படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக விமர்சகர்கள் விமர்சித்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை வனிதா அவர்கள் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முதலில் என்னுடைய படத்தை பாருங்கள். அதற்கு பிறகு என்னை என்ன திட்டினாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்.

https://www.youtube.com/watch?v=Fm6uK4hqnQk

வனிதா சவால்:

என் படத்தில் இருக்கும் எல்லா கண்டெண்டும் என்னுடைய ஒரிஜினல் கன்டென்ட். சினிமா விமர்சகர்கள் மீது ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கிறது. சில விமர்சகர்கள் சரியாக படத்தை பார்க்காமல் அரைகுறையாக விமர்சிக்கிறார்கள். என் படத்தில் இருந்து ஒரு காட்சியை காப்பி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் சினிமாவை விட்டு விலகிக் கொள்கிறேன். எந்த படத்தில் இருந்தும் நான் திருடவில்லை. நீங்கள் படத்தை பார்த்தால் தான் அது புரியும். கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அழகாக காண்பித்திருக்கிறோம். இதில் இருக்கும் எல்லா கண்டெண்டும் என்னுடையது என்று கூறியிருக்கிறார்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் கதை:

படத்தில் ஷகிலாவின் மகள் தான் வனிதா. இவர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்கிறார். ராபர்ட் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், வனிதாவை குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை வேஸ்ட் என்று வனிதாவிற்கு நெருக்கமானவர்கள் எல்லோருமே சொல்கிறார்கள். பின் தனக்கு குழந்தை வேண்டும் என்று வனிதா அடம்பிடிக்கிறார். அவருடைய கணவர் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். ராபர்ட் ஏன் குழந்தை வேண்டாம் என்கிறார்? வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full