லேட்டஸ்ட் நியூஸ் : ஊரடங்கு முடிந்ததும் வரலக்ஷ்மிக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ?

By Rajkumar · 18/5/2020

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் வரலக்ஷ்மி சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற பல்வேறு படத்தில் நடித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வந்தார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. பின் சில காரணங்களால் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது. பின் நடிகர் விஷாலுக்கும் வேற ஒரு பெண் உடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் தற்போது வரலட்சுமிக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரலட்சுமிக்கு பார்த்து உள்ள மாப்பிளை கிரிக்கெட் உடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவர் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதோடு கோலி,தோணி என இந்திய அணியின் பல வீரர்கள் உடன் மிகவும் நெருக்கமானவராக உள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் இவரின் குடும்பத்துக்கும் வரலட்சுமி குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நட்பாக இருந்த இவர்கள் உறவு காதலாக மலர்ந்தது. தற்போது திருமணம் வரை வந்திருக்கிறது என்கிறார்கள்.

மேலும், ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் அபிமன்யு மிதுன் எனும் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. லாக் முடிந்த முடிந்த பின்பு தான் வரலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படும். தற்போது இவர் ‘சேசிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் பைக் ரைடர் ஆக நடித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full