ஃபேக்டரி போல குழந்தை பெத்துக்குவாங்க, நான் உதவி செய்யணுமா? நடிகை வரலட்சுமி சரத்குமார் காட்டம்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. தற்போது வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த படம் எஸ். சரஸ்வதி. இந்த படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் ப்ரியாமணி, பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை வரலட்சுமி, பொருளாதார ரீதியாக நிலையற்ற தன்மையில் இருக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்.
எப்போது நிலையாக இருக்கிறோமோ அப்போது குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். நாட்டில் பாலியல் என்றால் என்னவென்றே பேச யாருமே தயாராகவில்லை. ஆனால், குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள். இப்படி ஒரு நாட்டில் தான் நாம் வாழ்கிறோம். மக்கள் தொகையில் உலக அளவில் நாம் தான் முதலிடம் இருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்வேன். ஆனால் செக்ஸ் என்றால் என்னவென்று பேசக்கூடாது, பேச மாட்டேன் என்ற ஒரு நடைமுறையை வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
வரலட்சுமி சரத்குமார் குறித்த தகவல்:
குழந்தையை திட்டமிட்டு பெற்றுக் கொள்ளக்கூடிய அறிவு கூட இல்லை. தொழிற்சாலை போல இங்கு எல்லா மனிதர்களும் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். பின் அவர்கள், குழந்தை வளர்ப்பது கஷ்டம் என்று சொல்கிறார்கள். ஏன் குழந்தையை பெற்றுக் கொண்டீர்கள்? முதலில் குழந்தையை வளர்க்க நீங்கள் தயாராக என்று யோசித்து திட்டமிட்டு அதற்குப் பிறகுதான் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வரலட்சுமி சரத்குமார் பேட்டி:
இப்போதெல்லாம் ஒரு குழந்தையை வளர்க்க தேவைப்படும் செலவு என்பது அதிகமாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக திட்டமிட்ட பின்னர் தான் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும். எப்போது யார் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. சில பேர் என்னிடம் அவர்கள் குழந்தையை கவனித்துக் கொள்வதற்கான செலவை கேட்டார்கள். நீங்கள் தவறு செய்ததற்கு நான் எதற்கு உதவி செய்ய வேண்டும். உங்கள் குழந்தையை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை வளர்ப்பு பற்றி சொன்னது:
நான் அந்த குழந்தையை பெற்றுக் கொள்ள சொன்னேனா? கல்யாணமோ, குழந்தையோ உங்களால் கவனித்துக் கொள்ள முடியும், பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும் என்றால் மட்டும் அதை செய்யுங்கள். தாத்தா, பாட்டி சொன்னார்கள், அவர்கள் இறப்பதற்கு முன்பு பேரக் குழந்தையை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் என்றெல்லாம் நினைத்து குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள். என்னை பொருத்தவரை குழந்தைக்காக நேரத்தை ஒதுக்கி அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த நீங்கள் எப்போது தயாரோ அப்போது குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.