42 வயதிலும் உள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் போஸில் நடிகை வித்யா பாலன்.

By Rajkumar · 25/6/2021

இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை வித்யா பாலன். இந்தியில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள இவர், தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகமானார். நடிகர் அஜித் , வினோத் குமார் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை 'படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து இருந்தார் வித்யா பாலன்.

இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்த வித்யா பாலன் இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால், இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் வெளியான 'டர்ட்டி பிக்சர்' திரைப்படம் இவருக்கு ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை துவங்கினார் வித்யா பாலன்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி இருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது 42 வயதாகும் இவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இந்த வயதிலும் கிளாமரை குறையாமல் பார்த்துக்கொள்ளும் இவர் சமீபத்தில் உள்ளாடை தெரியும் வகையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full