நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் யார் தெரியுமா? இவர் என்னவாக இருக்கிறார் பாருங்க- வைரலாகும் புகைப்படம்
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வித்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டதால் மீடியாவிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.
ஆரம்பத்தில் இவர் விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2 , மாரி 2, பொன்மகள் வந்தாள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் துணை வேடத்தில் நடித்திருந்தாலும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
வித்யா பிரதீப் குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்த 'நாயகி' சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் நடித்துக் கொண்டும் வருகிறார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் விஞ்ஞானியும் ஆவார். இது பலருக்கும் தெரியாது. இவர் பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்தார்.
வித்யா குறித்த தகவல்:
பின் சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ஸ்டெம் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை வித்யா அவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணம் ஆனதே பலரும் அறிந்திராத ஒன்று தான். இந்நிலையில் இவருடைய கணவர் குறித்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்யா கணவர் புகைப்படம்:
அதாவது, 13 வருடங்களுக்கு முன்பே நடிகை வித்யா அவர்கள் மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் பிரதீப் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். தற்போது வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு வித்யா-பிரதீப் உடைய திருமண புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.