திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமான நடிகை வித்யா பிரதீப்- வைரலாகும் பேபி பம்ப் போட்டோ ஷூட்

By subhashini · 10/11/2024

நடிகை வித்யா பிரதீப் கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வித்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டதால் மீடியாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார்.

அதற்குப்பின் இவர் அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2 , மாரி 2, பொன்மகள் வந்தாள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் துணை வேடத்தில் நடித்திருந்தாலும் சில படங்களில் இவர் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்த ‘நாயகி’ சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வித்யா பிரதீப் குறித்த தகவல்:

மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் விஞ்ஞானியும் ஆவார். இது பலருக்கும் தெரியாது. இவர் பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்தார். பின் இவர் சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ஸ்டெம் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் தொடர்ந்து படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

வித்யா திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த சட்டம் என் கையில் என்ற படத்தில் வித்யா பிரதீப் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக சதீஷ் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் அஜய் ராஜ்,மைம் கோபி, ரித்திகா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்தும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

வித்யா திருமணம்:

இவருக்கு திருமணம் ஆனதே பலரும் அறிந்திராத ஒன்று தான். அதாவது, 13 வருடங்களுக்கு முன்பே நடிகை வித்யா அவர்கள் மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் பிரதீப் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான் வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு வித்யா-பிரதீப் உடைய திருமண புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு இருந்தது.

வித்யா கர்ப்பம்:

மேலும், இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வித்யா பிரதீப் கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது. இவர் நிறைபாத கர்ப்பிணி ஆக தன்னுடைய கணவருடன் சேர்ந்து வெள்ளை நிற கவுன் அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். சீக்கிரமாகவே இவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full