அட்ஜஸ்ட்மென்ட் வார்த்தையே கொச்சையானது - சினிமா துறையில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை வினோதினி பேட்டி
சினிமா துறையில் நிகழும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பிரபல நடிகை வினோதினி பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை வினோதினி. 80ஸ் காலகட்டங்களில் வெளியான 'மணல் கயிறு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான, மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த 'கால்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் வெள்ளித் திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் வலம் வந்தவர். குறிப்பாக இவர் சித்தி, சொர்க்கம், குடும்பம், வாணி ராணி, ரோஜா, சீதா ராமன் போன்ற ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 'லக்ஷ்மி நிவாசா' என்ற கன்னட சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வினோதினி பேட்டி:
இந்நிலையில், சமீபத்தில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மீ டூ இயக்கத்தில் நான் பல விஷயங்களை பேசி இருக்கிறேன். நாம் அதைக் குறித்து பேச பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். தற்போது என்னுடைய கருத்தை கேட்பதற்காக நீங்கள் என்னிடம் இன்டர்வியூ எடுக்குறீங்க. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.
https://www.youtube.com/watch?v=H9LauAyetF8
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து:
மேலும், என்னுடைய கருத்தை சீரியஸாக கேட்பவர்கள் கேட்பார்கள். சிலர் அதை மிகவும் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். நான் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து எல்லா இன்டர்வியூக்களிலும் பேச கூடாது என்று நினைக்கிறேன். இப்போ எல்லா தொழில்களிலுமே பிளஸ் & மைனஸ் இருக்கிறது. அதே மாதிரி தான் நம்ம வாழ்க்கையிலே நிறைய பிளஸ் & மைனஸ்கள் இருக்கிறது.
அந்த வார்த்தை கொச்சையானது:
இன்னும் எதுக்கு அந்த வார்த்தையை எல்லாம் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க தெரியல. அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையே ரொம்ப கொச்சையாக இருக்கிறது. அப்போ இந்த காலத்தில் பாய்ஸ் & கேர்ள்ஸ் சேர்ந்து டேட்டிங் போறாங்க. அப்போ அதுக்கு என்ன பெயர். அது அவங்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதனால் யாருக்கும் தொல்லை இருக்கக்கூடாது அவ்வளவுதான். இந்த விஷயம் சினிமாவில் வரும்போது ரொம்ப ஹைலைட் பண்ணக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
ஐஎஸ்ஐ முத்திரை குத்தின ஐய்யர்கள்:
அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க புடிச்ச மாதிரி வாழ ரைட்ஸ் இருக்கு. மேலும், நான் மிகவும் கட்டுப்பாட்டான குடும்பத்தில் இருந்து தான் நடிக்கவே வந்தேன். நாங்க எல்லாம் ஐஎஸ்ஐ முத்திரை குத்தின ஐய்யர்கள். ஆனால், என்னுடைய தொழில் சினிமாவாக மாறியது. நிறைய படங்கள் நடித்ததற்கு பின்னர், கட்டுப்பாட்டான குடும்பத்தைச் சேர்ந்த பிராமணரையே திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.தற்போது இவரின் பேட்டிதான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.