சாமுண்டேஸ்வரி என்ற பெயரை மாற்றிய தி கேரளா ஸ்டோரி நடிகை - அவரே சொன்ன காரணம்.

By subhashini · 16/5/2023

தி கேரளா ஸ்டோரி பட நடிகை அதா ஷர்மா பெயரை மாற்றியது குறித்து பேசி இருக்கிறார். இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் செய்ய இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி படம்:

அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? விடுவிக்கப்பட்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் குறித்த சர்ச்சை:

மேலும், இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான போது திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விபத்தில் சிக்கிய அதா ஷர்மா:

அதோடு இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதோடு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்த படத்துக்கு வரி விலக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பட குழுவுக்கு மிரட்டல் வந்திருந்தது. இதனை எடுத்து நடிகை அதா ஷர்மா விபத்தில் சிக்கி சிக்கிக்கொண்டார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

பெயரை மாற்றிய அதா ஷர்மா :

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதா ஷர்மா தனது பெயர் மாற்றம் குறித்து பேசி இருக்கிறார். அதில் '“என் உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர் தனது அசல் பெயரை உச்சரிப்பது மிகவும் கடினம் என்று பகிர்ந்து கொண்டார், இதனால் மக்கள் தனது பெயரைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. இது சாமுண்டேஸ்வரி என்ற தனது பெயரை ஆதா ஷர்மா என்று மாற்றத் தூண்டியது' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full