தி கேரளா ஸ்டோரி படம் போலினு சொல்றவங்க, கூகுள்ல இந்த இரண்டு வார்த்தைய தேடி பாருங்க - படத்தில் நடித்த நடிகை போட்ட பதிவு.

By Rajkumar · 7/5/2023

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் தி கேரளா ஸ்டோரி படங்களுக்கு வரும் விமர்சனங்கள் குறித்து அந்த படத்தில் நடித்துள்ள நடிகை போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார்.

இந்த படம் இந்தியில் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி படம்:

திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் சுமாரான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

குவிந்த எதிர்ப்புகள் :

இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள்.

ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்களை திரையரங்கின் உள்ளே அனுமதித்து இருந்தார்கள். மேலும், வெளியான முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதா ஷர்மா போட்ட பதிவு :

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள அடா சர்மா என்ற நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில், 'நிறைய இந்தியர்கள் பாதிக்கப்பட்டதை பார்த்தபிறகும் தி கேரளா ஸ்டோரி படம் போலியானது என சொல்கிறார்கள். ISIS மற்றும் Brides என்ற வார்த்தையை தயவுசெய்து கூகுள் செய்யுங்கள். சில ஆங்கில பெண்கள் சொல்வதை கேட்ட பிறகாவது உங்களுக்கு எங்கள் இந்திய படம் உண்மை என புரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full