பிரபுவுக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இடையே இப்படி ஒரு உறவா? இத்தன இது தெரியாம போச்சே
நடிகர் பிரபு பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பின்னணி பாடகர் என்று பன்முகங்களை கொண்டவர். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.
முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
குட் பேட் அக்லி படம்:
இதை தொடர்ந்து தற்போது இவர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ஆதித் ரவிச்சந்திரன் பேட்டி:
இந்த படத்தின் ரீலீசுக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன், பிரபு சார் ரொம்ப ஸ்வீட். அவர் ரொம்ப அப்பாவியான நபர். பிரபு சார் உடைய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருக்கிற மாதிரியான அப்பாவி தனத்தை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. நான் பிரபு சார் உடைய மருமகன் என்ற விஷயத்தை சில நேரங்களில் மறந்து விடுவேன்.
https://www.youtube.com/watch?v=J12AjwqwLXQ
பிரபு பற்றி சொன்னது:
அவர் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ரொம்ப ஸ்வீட்டாக என்னை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். அவரை நான் சந்திக்கும்போது மார்க் ஆண்டனி படம் எல்லாம் வெளியாகவில்லை. இந்த படத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்னாடி தான் பிரபு சாரை சந்தித்தேன். அதே மாதிரி தான் விக்ரம் பிரபு அண்ணாவும் ஸ்வீட்.
எந்த நம்பிக்கையில் சார் எனக்கு ஓகே சொன்னார் என்று தெரியவில்லை. நான் நிறைய முறை இதைப் பற்றி அவரிடமே கேட்டிருக்கிறேன்.
பிரபு -ஆதிக் உறவு:
இந்த படத்தில் அவர் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். அஜித் சார் கூட ரொம்ப நாளைக்கு பிறகு அவர் நடிப்பதில் அவருக்குமே ரொம்ப ஹாப்பி. அதேபோல் அஜித் சாருக்குமே பிரபுசாரை ரொம்ப பிடிக்கும். அஜித் சாருக்கு நன்றி சொன்னால் பிடிக்காது. நான் நன்றி சொன்னால் அவர் எப்போதுமே திட்டுவார் என்று கூறி இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது. இது பிரபு மகளின் உடைய இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.