இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் நடிகை மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் இவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன் முதலாக 2007ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிருங்காரம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் தேவதாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமானார். அந்த படத்திற்காக இவருக்கு விருதும் கிடைத்தது. அதன் பின்னர் இவர் செக்க சிவந்த வானம் போன்ற சில படங்களில் நடித்தார். கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement

அதிதி ராவ் ஹைதாரி திரை பயணம்:

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், தற்போது 33 வயதாகும் இவர் விவாகரத்து பெற்றவர் என்றால் நம்ப முடியுமா! இவர் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது திருமணமானதை முதலில் மறுத்தார். பின்னர் இவர் 2013 ஆம் ஆண்டு தனக்கு நடந்த திருமணத்தை ஒப்புக்கொண்டார். இவர் 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதிதி ராவ் ஹைதாரி குடும்ப வாழ்கை:

பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தற்போது இவர் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தான் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இவருடைய பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நடிகைகள்:

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள். பொதுவாகவே சினிமா துறையில் நடிகைகள் சர்ஜரி செய்வது வழக்கமான ஒன்று. நடிகைகள் முக அழகும், உடல் தோற்ற அழகுக்காகவும் பல சர்ச்சைகள் செய்து வருகிறார்கள். அதிலும் மூக்கு, உதடு என்று ஒவ்வொரு உறுப்பு அழகுக்காக வெளிநாடுகளுக்கு சென்று ஸ்ரீதேவி தொடங்கி நயன்தாரா வரை என பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்கள். இந்த வரிசையில் அதிதி ராவ் இருக்கிறார்.

Advertisement

அதிதி ராவ் செய்த பிளாஸ்டிக் சர்ஜரி:

நடிகை அதிதி ராவ் சர்ஜரி செய்து கொண்ட பிறகு தான் சினிமாவுக்கு வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிளாஸ்டிக் சர்ஜரி முன் பின் என்று பதிவிட்டு சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தானா அதிதி ராவ்? இது தான் இவருடைய உண்மையான முகமா! என்று கேட்டிருக்கிறார்கள். மேலும், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இவருடைய புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement