இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ், இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்நிலையில் மீண்டும் பாண் இந்தியா படமாக பிரபாஸ் நடைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாம் ஆதிபுருஷ்.

ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை பயன்டுத்தி எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும் இப்படத்தை ஓம் ராவத் இயக்க தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரித்துள்ளார். பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்ககள்.

Advertisement

கதைக்களம் :

ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். எனவே கதையா பற்றி சொல்லி தெரியவேண்டிய அவசியம் கிடையாது. ராமன் தன்னுடைய ராஜ்யமான அயோத்தியில் இருந்து 14 ஆண்கள் வனவாசம் மேற்கொள்கிறார். அப்போது அவருடன் பயணித்த அவரது மனைவி சீதை ராவணனால் நாடுகடத்தப்பட்ட ராவணனை ஹனுமான் போன்றவர்களின் உதவியுடன் எப்படி வீழ்த்தி சீதையை காப்பாற்றினார் என்பதுதான் மீதி கதை.

ராமனாக பிரபாஸும் , சீதையாக கிருதி சனோனும் நடித்திருக்கிறார்கள். உடல் மொழி, முக பாவனை போன்றவற்றில் எப்போதும் போல பிரபாஸ் அசாத்தியமாக நடித்திருக்கிறார். அவருடைய ஒவொவொரு செயலும் ரசிகர்களை மகிழ்விக்கிறது. அதே போல சீதாவாக நடித்த கிருதி சிறப்பான நடிப்பபை வெளிப்படடுத்தி இருக்கிறார். இவர்களை போலவே ராவணனாக நடித்த சயீப் அலி கான் ஒரு அனுதாபமாகவும், சக்தி வாய்த்த வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

Advertisement

ஹனுமானாக நடித்த தேவதாத்தே ராமன் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கும் வேடிக்கையான வீரனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற துணை அதாபாத்திரங்களும் படத்திற்கு தேவையானவற்றை செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் படம் பார்க்க வேண்டியதுதான். ஆனால் இப்போதய இருக்கும் தொழில் நுட்பம், குறிப்பாக சினிமா துறையில் இருக்கும் தொழில் நுட்பம் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளதா என்றால் அதற்கு ஏமாற்றேம் பதில்.

Advertisement

கிராபிஸ் காட்சிகள்,VFX காட்கள் என அனைத்திலும் சொதப்பி வைத்திருக்கின்றனர் படக்குழுவினர், ராமாயணம் யுத்த காண்டம் என்பதினால் அதிகமான போர் காட்சிகள் இடம் பெரும். ஆனால் அதில் வரும் கிராபிஸ் வெளிப்படையாகவே அவை கிராபிஸ் தான் என்பதை காட்டுகிறது. ட்ரைலர் வந்த பிறகு VFX காட்சிகள் குறித்து பெரும் விமர்சனம் எழுந்த நிலையில் படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. மேலும் சில இடங்களில் போர் அடிக்கிறது. படத்தில் 15 நிமிடங்கள் கட் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

குறை :

VFC காட்சிகள் சொதப்பல்.

இரண்டாம் பாதியில் போர் அடிக்கிறது.

ஏற்கனவே தெரிந்த கதை என்பதினால் சுவாரசியம் இல்லை.

நிறை :

இசை சிறப்பாக இருந்தது.

பிரபாஸின் நடிப்பு அற்புதம்

அற்புதமான காவியத்தின் படைப்பு.

மொத்தத்தில் பிரபாஸ் நடிப்பிற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Advertisement