இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்தது - லோகேஷ் பாப்பின் தற்போதைய நிலை. புகைப்படம் இதோ.

By Rajkumar · 21/9/2020

ஆதித்யா சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ். இவர் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான், ஜாம்பி என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு

https://www.instagram.com/p/CFZKzDUhMs2/?igshid=e6x7jry8m864

எனக்கு முதல் ஆபரேஷன் முடிந்து பத்து நாட்கள் வரைக்கும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் பிளட் பிரஷர் அதிகமாக இருந்தால் தான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நினைத்தேன். அப்புறம் தான் எனக்கு நடந்ததை சொன்னார்கள். மூளையில் ரத்தம் கட்டி இருந்ததற்காக எனக்கு ஆபரேஷன் பண்ணினார்கள்.அப்போது மூலையில் இருந்த ஸ்கல்லை எடுத்திட்டு தான் ஆபரேஷன் பண்ணாங்க.முதல் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. இன்னும் ஒரு அறுவை சிகிக்சை இருக்கிறது.

இப்போ அந்த ஸ்கல்லை வைப்பதற்கு திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டுமாம். அதற்கு பிறகு நான் நல்ல ஆகிவிடுவேன் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னுடைய முகத்தோற்றம் கொஞ்சம் மாறி தான் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக லோகேஷ் பாப்பிற்கு 5 லட்ச ரூபாய் தேவைபட்டதால் . இதனால் மக்களிடம் உதவி கேட்டனர் லோகேஷ் பாப்பின் குடும்பத்தினர்.

https://www.instagram.com/p/CFZO-pSAmte/?igshid=n9pn0g9w86f1

இப்படி ஒரு நிலையில் லோகேஷ் பாப்பிற்கு அந்த இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்துள்ளது. மேலும், இன்னும் 10 நாட்களில் அவரது தலையில் போடப்பட்டுள்ள தையல் கூட பிரிகிப்படுகிறதாம். விரைவில் லோகேஷ் பாப் பழையபடி திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full