'நீங்க சொல்லுங்க dude' - ஆதித்யா ஆங்கர் அகல்யாவுக்கு திருமணம். மாப்பிளை இவர் தானாம்.

By ·

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் திகழ்கிறது. அதிலும் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்காக பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், டிவி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிறதோ? இல்லையோ ஆனால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசன். இவர் தன்னுடைய காமெடியான பேச்சாலும், எதார்த்தமான குணத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார். மேலும், எல்லோருக்கும் பிடித்தமான நகைச்சுவை சேனல்களில் ஒன்று தான் ஆதித்யா. இந்த ஆதித்யா சேனலில் பிரபல தொகுப்பாளினி ஆக பணியாற்றி வருகிறார் அகல்யா வெங்கடேசன். அதிலும் நீங்க சொல்லுங்க டூட் என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் பாருங்க : லையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலில் Bmw cycle ரைட் வீடியோ - சைக்கிளின் விலை கேட்டா ஆடிப் போவீங்க.

இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மட்டுமில்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் அகல்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சந்தோசமான செய்தி என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

அது என்னவென்றால், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்து தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அகல்யாவுக்கு வாழ்த்துக் கூறி புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் உங்களோட திருமண தேதி என்னவென்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். தற்போது அகல்யா சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full