தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஈ4 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடித்து `வர்மா’ என்று பெயரிடப்பட்டு அந்தப் படம் தமிழில் முழுமையாக எடுக்கப்பட்டது.  

கடந்த காதலர் தினத்தன்று வெளியாக இருந்த நிலையில், பாலா படத்தின் முழு படத்தை பார்த்த பட நிறுவனம் `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் ஃபைனல் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை’ என அறிவித்து அதிர்ச்சியளித்தது.

Advertisement

இந்நிலையில் இந்த படத்தை தற்போது கிரி சாயா என்பவர் இயக்கவுள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்கு தற்போது ‘ஆதித்யா வர்மா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் துருவ் ஜோடியாக பனிதா சந்து என்பவர் நடிக்கிறார்.

பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபி பெண்ணான இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் அழகியான இவர் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement