சித்தார்த்தை திருமணம் செய்ய காரணம் இது தான் - வெளிப்படையாக சொன்ன நடிகை அதிதி ராவ்
தன்னுடைய கணவரை குறித்து முதன்முதலாக மனம் திறந்து நடிகை அதிதி ராவ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களாக சித்தார்த்- அதிதி ராவ் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு மஹா சமுத்திரம் என்ற படத்தில் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் இருந்தே இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது. ஆனால், இதை இருவரும் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள்.
மேலும் , சித்தார்த்- அதிதி ராவ் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள். அதோடு அடிக்கடி இருவரும் டேட்டிங் சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து இருந்தார்கள். பின் தெலுங்கானாவில் உள்ள கோவிலில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. கடந்த ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அதிதி உடைய முன்னோர்கள் வனர்பதி ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள்.
சித்தார்த்-அதிதி திருமணம்:
அதனால் சித்தார்த் மற்றும் அதிதி உடைய திருமணம் அவர்களுடைய முன்னோர்களால் கட்டப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு பழமையான வனர்பதி கோயிலில் தான் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் சிலர் தான் கலந்திருந்தார்கள். இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சித்தார்த் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அதிதி ராவ், சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவே இல்லை.
அதிதி ராவ் பேட்டி:
காரணம், அவர் ரொம்ப நல்ல மனிதர். அவரிடம் செயற்கையாக எதுவுமே கிடையாது. நீங்கள் பார்ப்பது போல தான் அவர் நிஜத்திலுமே இருப்பார். அவர் ரொம்ப அன்பானவர். எனக்கு நெருக்கமானவர் ஒருவரை பற்றி தெரிந்தால் உடனே அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வர வைத்து விடுவார். அது அவரிடம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மேலும், ஹீராமாண்டி படத்திற்கு வரவேற்பு தொடர்ந்து எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு பின் வாய்ப்பே வரவில்லை.
சினிமா வாய்ப்பு பற்றி சொன்னது:
என்ன நடக்கிறது என்று நான் கவலையாக இருக்கும்போது தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். திருமணத்திற்கு பிறகு நடிக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். மேலும், நடிகர் சித்தார்த் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
சித்தார்த் திரைப்பயணம்:
சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை அடுத்து கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்து இருந்தார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் அதிக அளவிற்கு வெற்றி அடையவில்லை. கடைசியாக சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மிஸ் யூ. இந்த படம் ரசிகர்கள் நடிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டெஸ்ட். YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் நான்காம் தேதி தான் திரைக்கு வர இருக்கிறது.