ஏன், எதுக்கு இப்படி பண்றீங்க? தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு அதிதி சங்கர் கொடுத்த பதிலடி

By subhashini · 7/1/2025

தன்னை குறித்த விமர்சனங்களுக்கு அதிதி சங்கர் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தற்போது இவர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சேர் படத்தை இயக்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி சங்கர். இவர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தியின் விருமன் படத்தில் தான் முதலில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார்.

அதிதி சங்கர் பற்றிய தகவல்:

இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகை போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார் அதிதி. இதை அடுத்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த மாவீரன் படத்தில் நடித்து இருந்தார். இதை எடுத்து அதிதி சங்கர் அவர்கள் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

நேசிப்பாயா:

இந்த படம் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தற்போது அதிதி சங்கர் அவர்கள் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆகாஷ் முரளி, குஷ்பூ, பிரபு, சரத்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதிதி சங்கர் பேட்டி:

தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், சோசியல் மீடியாவில் அதிதி சங்கர் குறித்து எழும் விமர்சனங்கள் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அதிதி சங்கர், என்னை பற்றி வரும் விமர்சனங்களை பார்த்து நானே சிரிப்பேன். அவர்களுக்கு பதிலும் கொடுப்பேன். சில விமர்சனங்களை பார்க்கும்போது, எதற்கு? ஏன்? என்று கேட்டு விடுவேன். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

நெட்டின்சன்கள் கிண்டல்:

என்னை பற்றிய மீம்ஸ் பார்த்து ரொம்ப என்ஜாய் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். இவர் இப்படி குறிப்பிட்டு கூறியிருப்பதற்கு காரணம், கடந்த ஆண்டு சங்கரின் இந்தியன் 2 படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் அதிதி சங்கர், தன்னுடைய தந்தை படத்தில் வெளியாகியிருந்த பாடல்களை பாடி இருந்தார். அதை வைத்து நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full