சமீப காலமாகவே அரசியலில் சினிமா பிரபலங்கள் பலர் ஈடுபடுவதாக பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது சினிமா பிரபலங்கள் மீது அரசியல் தாக்கம் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தற்போது ரஜினி, அஜித் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் களம் இறங்குவதாக அவரே வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருவதால் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் “தர்பார்”.

இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “தலைவர் 168” படத்தில் நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, ரஜினியுடன் சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது.

Advertisement

அதே போல் தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம்,நேர்கொண்ட பார்வை படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர், தல அஜித் மூவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்து “வலிமை” என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் இவரை அரசியலில் சேர்த்து வைத்து பல்வேறு விதமாக பேசுகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் ஒருவர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரைய்டுக்கு காரணம் அரசியல் தலையீடா? என்றும் ரஜினிக்கு சமமாக விஜய் வருவதனால் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறதா? என்றும் கேட்டார்கள். அதற்கு ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியது, இது வந்து சாதாரணமாக வருமான துறை அதிகாரிகள் செய்த கடமை. அதிகாரிகளுக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அவரவர்கள் வேலையை பார்க்கிறார்கள். ரஜினிக்கு சமமாக நடிகர்கள் யாரும் கிடையாது. ரஜினிக்கு சமம் என்றால் அது அஜித் மட்டும் தான். அவங்க ரெண்டு பேரும் தான் ஜல்லிக்கட்டு காளைகள். “ரஜினி மலை, அஜித் தலை” என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளார்கள்.

Advertisement
Advertisement