லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

Advertisement

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.

அதே போல பேட்ட படத்தை விட மாஸ்டர் படத்தின் மூலம் விஜய் சேதுபதியின் வில்லன் மாஸ் ஏறியுள்ளது. இதனால் அடுத்தடுத்து விஜய் சேதுபதியை பெரிய ஹீரோ படங்களில் வில்லனாக கமிட் செய்ய போட்டி போட்டு வருகின்றனராம். அந்த வகையில்  பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.  ‘கே.ஜி.எஃப் 2’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளார் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்.ஆனால், விஜய் சேதுபதி இன்னும் சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement
Advertisement