எப்படி இருக்கிறது ஜெயம் ரவி நடித்துள்ள 'அகிலன்' - முழு விமர்சனம் இதோ.

By Manikandan · 10/3/2023

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படம் பெரிய ஹிட் அடித்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் "அகிலன்"" என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் "பூலோகம்" படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் மீண்டும் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும் ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி போன்ற நடிகர்களுடன் இணைத்து ஜெயம் ரவி நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

கதைக்களம் :

அகிலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி துறைமுகத்தில் சட்டவிரோத வர்த்தகத்தின் தலைவராகவும் செயல்படும் கிரேன் ஆபரேட்டரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவற்றின் அனைத்திற்கும் தலைவனாக கபூர் இருக்கிறர். அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் அவரை சந்திக்க பல நாடுகளில் உளவு வேலை செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் அகிலனை கைது செய்ய நினைக்கும் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். இந்நிலையில் அகிலன் அந்த நபரை கடத்தினாரா? இல்லை போலீஸில் சிக்கினாரா? என்பது தான் மீதி கதையாக இருக்கிறது.

பல காலம் கழித்து தமிழ் சினிமாவில் கடல் மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது, அதோடு சில துறைமுக காட்சிகளை எடுப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது என ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த கடின உழைப்பு தற்போது பலனளித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

படத்தின் இயக்குனர் திரைக்கதையில் அதிகமாக கவனம் செலுத்துயிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது. கதை இதுத்தான் என்று தெரிந்தாலும் கூட சில சிக்கலான திருப்பு முனைகள் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க கடினமாக இருப்பதினால் அது சுவாரசியத்தை கூடுகிறது. பின்னணி இசையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னியிருக்கிறார். இவர் சமீபத்தில் இசையமைத்து கொடுத்த அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

படத்தின் குறை என்று சொல்வதற்கு குறைவாகத்தான் இருந்தது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில வசனங்கள் பொறுமையை சோதித்தது. ஆனால் ட்ரைலர் பார்த்து படம் பார்க்க வந்தவர்கள் கண்டிப்பாக திருப்தி அடைந்திருப்பார்கள் அதில் சந்தேகம் இல்லை. அதே போல கடல் மற்றும் கப்பல்கள் போன்ற விஷியங்களை திரைக்கு கொண்டு வருவதில் ஒளிப்பதிவாளர் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அந்த சிரமத்திற்கு பலனும் படத்தில் கிடைத்திருக்கிறது.

குறை :

குறை என்பதற்கு பெரியாக இல்லை.

இரண்டாம் பாதி சில இடங்களில் மெதுவாக நகர்ந்தது.

நிறை :

ஜெயம் ரவி நடிப்பு பிரமாதம்.

இதர கதாபாத்திரங்களும் படத்திற்கு தேவையானதை செய்திருக்கின்றனர்.

ஒளி, ஒலி போன்றவற்றில் சூப்பர்.

திரைக்கதையை நகர்த்திய விதம் அருமை

மொத்தத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இன்னொரு வெற்றி படம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full