கட்டா குஸ்தி படம் பற்றி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது பொன்னியின் செல்வன் படம் தான். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அட்டகாசமாக நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா லட்சுமி குறித்த தகவல்:
இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருந்தது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டா குஸ்தி. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும், இந்த படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து இதனுடைய இரண்டாம் பாகத்தையும் எடுத்து இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி:
தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்கான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி முதல் பாகத்தினுடைய இன்டெர்வல் பகுதியில் எனக்கு ஒரு மாஸ் காட்சி வைத்திருந்தாங்க. அந்த காட்சியை பற்றி சொல்லும்போது எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது.
கட்டா குஸ்தி பட்ஜெட்:
விஷ்ணு விஷால் சார் நடித்த, தயாரித்த படங்களில் அதிக செலவழித்த சீன் அந்த இன்டர்வல் காட்சி தான். கிட்டத்தட்ட அந்த காட்சிக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணினோம். அது ஹீரோயினிக்காக எடுக்கப்பட்ட சீன். அந்த சீனை நானும் சின்னதாக தான் நினைத்திருந்தேன். ஆனால், இயக்குனர் செல்லையா சாரும் விஷ்ணு விஷால் சாரும் அந்த சீனை ரொம்ப பெருசாக மாற்றி விட்டார்கள். திரையரங்குகளில் அந்த சீனுக்கு பயங்கர க்ளாப்ஸ் கிடைத்தது. அது ஒட்டுமொத்த குழுவினருடைய முயற்சி. நான் வெறும் கதையை மட்டும் கேட்டேன். எனக்கு பிடித்திருந்தது. இவர்களால் தான் அந்த காட்சி இன்னும் பெரிசாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்