எல்லாராலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவாக முடியுமா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்
எல்லாராலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவாக முடியுமா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது பொன்னியின் செல்வன் படம் தான். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அட்டகாசமாக நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா லட்சுமி குறித்த தகவல்:
இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருந்தது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டா குஸ்தி. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும், இந்த படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து இதனுடைய இரண்டாம் பாகத்தையும் எடுத்து இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி:
தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்கான ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தை பாராட்டிருந்தார்கள். ஆனால், சில பேர் எதற்காக இந்த மாதிரி சின்ன கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.
ராஷ்மிகா பற்றி சொன்னது:
என்னை பொறுத்த வரை கதாபாத்திரம் பெரியதா? சிறியதா? என்பது முக்கியம் கிடையாது. அந்த கதை திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். எல்லோராலும் ராஷ்மிகா மந்தனாவாக முடியாது. முழு நீளமாக கமர்சியல் கதாநாயகி கதாபாத்திரங்களை அவர் ரொம்ப அழகாகவும் நளினமாகவும் செய்கிறார். அந்த மாதிரி நடனமாடவோ, முழுமையாக கமர்சியல் ஹீரோயினியாகவோ என்னால் இருக்க முடியாது. அது ரொம்பவே கடினமான விஷயம் என்று கூறி இருக்கிறார்.