விஜய் அரசியலுக்கு வரனும்ன்னு எந்த தேவையும் இல்லை, ஆனால் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

By subhashini · 2/5/2026

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் , கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது பொன்னியின் செல்வன் படம் தான். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அட்டகாசமாக நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி திரைப்பயணம்:

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருந்தது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டா குஸ்தி. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது ஐஸ்வர்யா லட்சுமி கட்டா குஸ்தி 2 என்ற படத்தில் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் ஐஸ்வர்யா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இன்று நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்து கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் விஜய் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு ஐஸ்வர்யா லட்சுமி, எனக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். நான் கேரளாவில் இருக்கிறேன். இங்கு எனக்கு ஓட்டே இல்லை என்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னுடைய நண்பர்களில் விஜய் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். எங்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லையே என்று வருத்தமாக இருந்தது. அவர் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

https://www.youtube.com/watch?v=bQCCZPFrWOo

விஜய் அரசியல் பற்றி சொன்னது:

அரசியலுக்கு வர வேண்டிய எந்த தேவையுமே அவருக்கு இல்லை. இருந்தாலும் மக்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பின் காரணமாகத்தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். எனக்கு இவ்வளவு அன்பை கொடுத்த மக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் வந்திருக்கிறார். அவர் அந்த எண்ணத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மீடியாவில் பார்க்கும் போது மக்களுக்கும் அதே ஆசை இருக்கிறது என்பதை தெரிகிறது. ஆனால், நான் அதை சொல்லக்கூடாது மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full