டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 19/5/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மேலும், இவர் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்த 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார். இப்படி இளம் வயதிலேயே முன்னணி நடிகர்களுக்கு தங்கையாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார். தற்போது தமிழில் மட்டும் 6 படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்ற வீடியோ ஒன்று வைரலானது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full