அவங்கெல்லாம் இந்த விளம்பரத்தில் நடிக்கிறாங்க, அத ஏன் கேள்வி கேட்க மாற்றீங்க - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்.

By Rajkumar · 23/8/2020

நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த ஃபேர்னஸ் கிரீம் விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. சமீபத்தில் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அதற்கு 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார்.என் தங்கைக்கு அவளை விட நான் வெள்ளையாக இருக்கிறேன் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது.

வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அவர் காய் மற்றும் பழங்களை சாப்பிட்டால். அப்போது தான் நான் உணர்தேன் வெள்ளை ஆக வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு பிடிக்காததை கூட செய்தால்.அப்படி இருக்க நானே கிரீம் தடவினால் வெள்ளை ஆகலாம் என்று மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா. அப்படி வரும் பணத்தில் நான் என்ன காண போகிறான். அந்த பணத்தை வைத்து நான் அதே சாப்பாட்டை தான் சாப்பிட போகிறேன். நம்மை சுற்றியுள்ளவர்களை நாமே ஏமாற்ற கூடாது என்று கூறியிருந்தார் சாய் பல்லவி.

ஆனால், அந்த விளம்பரத்தில் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரம்பத்தில் இந்த விளம்பரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் அணுகியபோது அவர் முதலில் சிரித்து விட்டாராம். தான் கருப்பு என்பது அனைவருக்குமே தெரியும் அதே போல என்னுடைய நிறம் எனக்கு பிடிக்கும். கருப்பாக இருக்கும் பலரும் வெள்ளையாக மாற ஆசை படுவது குறித்து எனக்கு வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால். இந்த இந்த ஃபேர்னஸ் கிரீம் பொலிவை உண்டாகுமே தவிர வெள்ளையாக்குவதற்கு கிடையாது என்று பதில் அளித்ததால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். மேலும், இந்த விளம்பரத்தில் எப்படி இந்த கிரீமை பயன்படுத்தி வெள்ளையாக மாறுவது என்பதை காட்டவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேபோல ஒரு சில நடிகர்கள் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் அதைப் பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full