நிவர் புயல் மழையால் காரில் சிக்கிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ். இறுதியில் எப்படி சென்றுள்ளார் பாருங்க.

By Rajkumar · 25/11/2020

நிவர் புயல் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விமான நிலையம் செல்ல அவதிப்பட்டுள்ளார். கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, அடுத்த 12 மணி நேரத்தில் இது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புயல் தமிழகத்தில் சென்னயில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட போக்குவரத்தில் சிக்கி சிரமப்பட்டு இருக்கிறார்தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார் .தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் சென்னயில் இருந்து ஹைத்ராபாத்திற்கு சென்று உள்ளார்.

ஹைதராபாத் செல்வதற்காக, சென்னை விமானம் நிலையத்திற்கு காரில் வந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், நிவர் புயல் புயலால் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக அவரது கார், போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்கிக்கொண்டுவிட்டது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து விமானநிலையத்தை அடைந்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full