துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து  ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகளை நீக்கிய கவுதம் மேனன்? இதான் காரணமா ?

By Arun · 22/7/2023

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் “கோப்ரா”. இந்த படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

விக்ரம் திரைப்பயணம்:

இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

விக்ரம்-ரஞ்சித் கூட்டணி:

கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரம்:

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் வேலைகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தினுடைய முக்கிய காட்சிகள் எல்லாம் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டது. மேலும், இந்த படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்கள் இந்த படம் தள்ளிக் கொண்டே சென்றது. அது மட்டும் இல்லாமல் விக்ரம், கௌதம் மேனன் இருவருமே அடுத்தடுத்து பட வேலைகளில் பிஸியாக இருந்ததார்கள்.

படத்தில் விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்:

பின் கடந்த வருடம் தான் இந்த படத்தினுடைய வேலைகள் எல்லாம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளை எல்லாம் கௌதம் மேனன் நீக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதையில் மாற்றம் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடிக்கிறார்களா? இல்லை அந்த கதாபாத்திரத்தை தூக்கி விட்டார்களா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full