சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ.

By subhashini · 10/3/2022

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் உடைய மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட்,டோலிவுட்,பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியருக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இருவரும் தாங்கள் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. 18 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது.

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

இவர்களின் இந்த பிரிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பிரிவிற்கு பின் தனுஷ் அவர்கள் வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அதே போல் ஐஸ்வர்யாவும் தனிக்குழு உடன் இயக்கும் இசை ஆல்பத்தில் பிசியாக வேலை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா இயக்கிய ஆல்பம் சாங்:

பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில வாரங்களுக்கு முன்பு கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யவில்லை. இதனால் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். இருந்தாலும் இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது ஐஸ்வர்யா இயக்கி உள்ள முசாபிர் எனும் மியூசிக் வீடியோவின் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்தது.

ஐஸ்வர்யா இயக்கும் புது படம்:

இந்தநிலையில் ஐஸ்வர்யா அடுத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா தற்போது மியூசிக் வீடியோவை இயக்கியிருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு சிம்பு உடல் எடையை குறைத்த பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறாராம்.

சிம்பு-ஐஸ்வர்யா குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, சிம்புவும் ஐஸ்வர்யாவும் காதலித்ததாகவும், பின்னர் சில காரணங்களால் இவர்களுடைய காதல் பிரிந்து விட்டது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இது உண்மையா? பொய்யா? என்பது யாருக்கும் தெரியாது. அதற்குப் பிறகுதான் தனுஷ் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது தனுஷை பிரிந்த நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் சிம்புவுடன் இணைந்து படம் இயக்குவது குறித்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிம்பு ஐஸ்வர்யாவை தவிர நயன்தாரா, ஹன்சிகா என்ற பல பேர்களை காதலித்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், ஐஸ்வர்யா - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full