கிரிக்கெட் வீரரை காதலித்துள்ள பொன்னியின் செல்வன் பூங்குழலி - யார் தெரியுமா ? அவரே சொன்ன தகவல்.

By Ajju · 11/5/2023

பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி கிரிக்கெட் வீரரை காதலித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 2017 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். பின் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் , கார்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகியது பொன்னியின் செல்வன் படம் தான். மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பொன்னியின் செல்வன். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து இருந்தது.

ஐஸ்வர்யா லட்சுமி திரைப்பயணம்:

இதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை இயக்குனர் கட்டா அய்யாவு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், ரவி தேஜா, ஐஸ்வர்யா லட்சுமி, முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரிக்கிறார்கள்

கட்டா குஸ்தி படம்:

குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். இதனை அடுத்து சில வாரங்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் பூங்குழி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இதனை அடுத்து பல படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி:

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி கிரிக்கெட் வீரரை காதலிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனுக்கு பிடித்த விஷயம் குறித்து கூறியது, நான் பிறந்த போது என்னுடைய அப்பா எனக்கு ஸ்ரீ லட்சுமி என்று பெயர் வைத்தார். அம்மா ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார். கடைசியில் ஐஸ்வர்யா லட்சுமி என்று ஆனது. எனக்கு படத்தில் இந்த கதாபாத்திரத்தால் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால், எனக்கு வில்லி வேடங்களில் நடிக்க பிடிக்காது. நான் ஓய்வு நேரங்களில் புடவைகளை கட்டிக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வேன். அதோடு அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் படங்களை அதிகமாக பார்த்தேன். மேலும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அவரை மனதிற்குள்ளே நான் காதலித்துக் கொண்டிருந்தேன். இப்போது கிரிக்கெட் பார்க்க எனக்கு நேரமே இல்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full