பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம் - அவரே சொன்ன தகவல்

By subhashini · 26/9/2022

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு மணிரத்தினம் வாய்ப்பு கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார்.

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. அதோடு இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமா உலகில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டி:

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராய் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது செட்டிக்குள் நுழைந்த உடனே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க என்னுடைய மகள் ஆராத்யா என்னுடன் அடிக்கடி வருவார்.

மகள் குறித்து ஐஸ்வர்யா ராய் சொன்னது:

அப்போது மணிரத்தினம் என்னுடைய மகளுக்கு ஆக்சன் என்று கூறும் வாய்ப்பை கொடுத்திருந்தார். இதைப் பற்றி என் மகள் என்னிடம் கூறும்போது எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது என்று கூறியிருந்தார். இப்படி ஐஸ்வர்யா ராய் அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது .

behindtalkies AMP · Quick view
View full