ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் இந்த சீரியல் நடிகரா.! யாருனு பாத்தா ஷாக்காவீங்க.!

By Rajkumar · 10/9/2019

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில்நடித்துள்ளார். ஆனால், “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தனுஷ் தயாரிப்பில் வெளியான 'காக்கா முட்டை' படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதை கூட பெற்றிருந்தார். சமீபத்தில் இவரரது நடிப்பில் வெளியாகியுள்ள "வட சென்னை" படத்திலும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம்.

ஆம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார், அவரும் ஒரு பிரபல நடிகர் தான். அது வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகரான மணிகண்டன் தான். இவர் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிவா மனசுல சக்தி தொடரில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full