வீட்டு லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது இந்த கொள்ளை சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். . கோலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டு காலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருந்தது.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா இளைய மகள் சௌந்தர்யா. இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய 3, வை ராஜா வை போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இவர் தனுஷை பிரிந்து தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திஇருந்தது. அதாவது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், நவரத்தின கற்கள், தங்க நகைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்த தகவல் இப்போது தான் தெரிய வந்துள்ளது.அதில், நெக்லஸ்கள், ஆரம் வைர நகைகள் உள்ளிட்ட 3 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டுப் போய் இருக்கிறது. வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் தான் இந்த வேலையை செய்திருக்கலாம் என்றும் புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அடுத்து போலீஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர் .

Advertisement

அதோடு 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று வீடுகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாறி இருக்கிறாராம். அந்த வகையில் போயாஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் நடிகைகளை வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா. மேலும் நகைகளை வைத்த லாக்கர் சாவி வைக்கப்பட்டிருக்கும் இடம் தனது பணியாளர்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் அடிக்கடி வீட்டிற்கு செல்வார்கள் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரிந்த மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

Advertisement

இதில் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2019 ஆம் ஆண்டிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகளை சிறிது சிறிதாக எடுத்து விற்பனை செய்து பணமாக மாற்றி செலவழித்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஈஸ்வரியின் வங்கி பரிவர்த்தனை மூலம் அவரது வங்கிக் கணக்கில் அடிக்கடி பணம் புழங்கியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Advertisement