Hard Disc கெடச்சதா? ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு.

By Ajju · 3/4/2024

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து இவர் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். இதை அடுத்து இவர் 7 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின் லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் இவர் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

https://twitter.com/vshankar1509/status/1765516142972727566

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் ரஜினி அவர்கள் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துஇருந்தார் . கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கௌரவ புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லால் சலாம் படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூலும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லால் சலாம் படம் குறித்து வந்த விமர்சனத்திற்கு மனம் திறந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருந்த பேட்டி இணையத்தில் பெரும் வைரலாகி ட்ரோல்களுக்கு உள்ளானது.

படத்தில் ஒரு முக்கியான காட்சிகளை 21 நாட்களும் நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை படமாக்கியிருந்தோம், இது ஒரு உண்மையான கிரிக்கெட் போட்டி போல் படமாக்க விரும்பினோம். இருபது கேமராக்களின் காட்சிகளையும் நாங்கள் தவறவிட்டோம். கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. விஷ்ணு, செந்தில், அப்பா உட்பட அனைவருமே தங்கள் கெட்-அப்பை மாற்றிக்கொண்டதால் அந்த காட்சியை மீண்டும் எங்களால் படமாக்க முடியவில்லை.

கடைசியில், மீதி இருந்ததை வைத்து படத்தை மீண்டும் எடிட் செய்தோம்' என்றும் கூறி இருந்தார். மேலும், படத்தினுடைய கதை ஸ்ட்ராங்காக இருந்தாலும் ரஜினிகாந்த் என்பவரை முதல் பாதியில் கொண்டு வந்தால் தான் கதை எங்குமே நிற்கவில்லை. தலைவரை எப்போது காட்டுவீர்கள் என்பது போல் ஆகிவிட்டது. என்ன நல்ல கதையாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் அனைத்தையும் தூக்கிவிடும்' என்று கூறி இருந்தார்.

இவர் இப்படி பேசியது சமூக வலைதளத்தில் பெரும் கேலிக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் திருப்பதிக்கு நடந்தே சென்று இருக்கும் ஐஸ்வர்யா 'ஓம் நம ஷிவாய என்ற ஸ்லோகன் களை எழுதி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் Hard Disc கெடச்சதா என்று கேலி செய்து வருகின்றனர்.மேலும், சிலரோ உங்க அப்பா சங்கீ இல்ல என்று கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full