தனது 50வது பிறந்தநாளை கூட இவ்வளவு சிம்பிளாக கொண்டாடியுள்ள அஜித் - வெளியான புகைப்படம்.

By Rajkumar · 2/5/2021

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாஸ். தல அஜித்தின் படம் திரையரங்களில் வெளியாகுவது என்று சொன்னாலே போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையைச் சேர்ந்தவர். இறுதியாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்நிலையில் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் திட்டமிட்டபடி 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாது என்று போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து தெரிவித்த இருந்த அவர், ,கொரோனா நோயின் இரண்டாம் அலை வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இந்தஇத்தகைய அசாதரண சூள்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று அஜித் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பொதுவாக அஜித் தனது பிறந்தநாளை சிம்பிளாக தான் கொண்டாடுவார். ஆனால், நேற்று அவரின் 50வது பிறந்தநாள் என்பதால் அதையாவது கொஞ்சம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் எப்போதும் சிம்பிள் தான் என்று நிரூபித்துள்ள அஜித், தனது 50வது பிறந்தநாளை கூட மிகவும் சிம்பிளாக கொண்டாடியுள்ளார் அஜித். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full