பூஜையுடன் தொடங்கிய தல 59 படம்..!முதல் மரியாதையை யாருக்குனு பாருங்க..!

By Rajkumar · 14/12/2018

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்கவிருகிறார்.

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை 'சதுரங்க வேட்டை', 'திரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.மேலும்,இந்த படம் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீ-மேக் என்றும் கூறப்படுகிறது.

அதே போல இந்த படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் இந்தி நடிகை வித்யா பாலனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.   

சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த அஜித் தற்போது தனது 59 படத்திற்கு ஆயுத்தமாகி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை துவங்கியது.அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வாங்கப்பட்டுள்ளது.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full