22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் இணையும் நடிகை - 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகை. யார் தெரியுமா ?

By Rajkumar · 18/2/2022

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பெண்களிடமும் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது. அதற்கு பிறகு அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்துள்ளார். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் வலிமை படத்திலும் இணைந்துள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் வினோத் , அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. இது அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், தீபாவளிக்கே வலிமை படம் ரிலீஸ் ஆகும் நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போனது. அதுமட்டுமில்லாமல் கொரோனா இரண்டாம் கட்ட அலை போது படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

வலிமை ரிலீஸ் பற்றிய தகவல்:

பின் பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் வினோத்குமார் மொத்த டீமும் 'ஏகே 61' படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். 'ஏகே 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

அந்த வேலைகள் நிறைவடைந்த பிறகு படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள். 2000ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தில் மம்முட்டி, அஜீத், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தற்போது 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்-தபு இணைந்து நடிக்கிறார்கள். நடிகை தபு இறுதியாக 2013 ஆம் ஆண்டு டேவிட் படத்தில் நடித்து இருந்தார். தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ஏகே 61 படத்தில் அஜித் லுக்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி விட்டார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குனரிடம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் லுக்கை பார்த்து வினோத்தும் ஆச்சரியம் ஆகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. டெக்னீசியன்கள் டீமில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்புராயன் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இருவருமே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் பணியாற்றியவர்கள். அந்த மொத்த டீமும் இந்த படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது.

ஏகே 61 படப்பிடிப்பு குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை இருக்கலாம் என்கிறார்கள். அதோடு இந்த படத்தில் மோகன்லால், நாகர்ஜுனா, அதிதிராவ் ஆகியோரும் இருப்பதாக வந்த தகவலை தயாரிப்பு தரப்பினர் முற்றிலும் மறுத்து விட்டனர். அதுமட்டும் இல்லாமல் வலிமை ஐந்து மொழிகளில் வெளியாவதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full