அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் தாமதமாவதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் கொண்டு இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

Advertisement

துணிவு படம்:

இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதோடு படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது.

ஏகே 62 படம்:

அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகியத்தை குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

Advertisement

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

அதற்கு சமீபத்தில் விக்னேஷ் சிவன், நான் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் கதையை மாற்ற சொன்னார்கள். ஆதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் இந்த படத்தில் இருந்து விளங்கிக் கொண்டேன். அதோடு கதையை மாற்ற சொல்லி அஜித் எதுவும் கூறவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் தாமதமாவதற்கான காரணம் குறித்த தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

ஏகே 62 அப்டேட்:

அதாவது, வருகிற மே 1 அஜித் பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்தினுடைய கதையை நிறைவு செய்யும் பணியில் மகிழ்திருமேனி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விக்னேஷ் சிவன் செய்த தவறு இன்னொரு முறை நடக்கக் கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் அமைதியாக இருக்கிறார்கள்.

Advertisement