பேராசையால் உதவி செய்ய பின் வாங்கியுள்ள அஜித் - செல்பிஷ் பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ள போலீஸ்.

By Rajkumar · 23/4/2021

மருத்துவமனைக்கு வந்த அஜித்தை வீடியோ எடுத்ததால் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த போது அங்கே வேலை பார்த்துவந்த பர்ஷானா என்ற பெண் ஒருவர் அஜித்தை கண்ட ஆர்வத்தில் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அஜித்தை வீடியோ எடுத்ததால் சம்மந்தபட்ட அந்த பர்ஷானா மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் அஜித் தரப்பு புகார் அளிக்க அந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செத்தது மருத்துவமனை நிர்வாகம்.

https://www.youtube.com/watch?v=FY7VpAkwtxo&t=206s

தனது தவறை உணர்ந்த அந்த பெண் அஜித்தை நேரில் சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு பின்னர் தன் வேலையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஓராண்டாக அஜித்தை சந்திக்க அவரது வீட்டு வாசலில் காத்துகொண்டு உள்ளார். ஆனால், வீட்டின் பாதுகாவலர்களே அஜித்தை சந்திக்க அனுமதியை மறுத்துள்ளனர். இதையடுத்து பெஃப்சி யூனியன் மூலம் அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார்.

இதையும் பாருங்க : சீரியல் நடிகையுடன் நிச்சயதார்த்தம் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் - இப்போ 6 மாதத்தில் அப்பாவாகியுள்ள ஆர் கே சுரேஷ்.

அது பலனளிக்க, பர்ஷானாவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டு அவருடனும் பேசியுள்ளார். அவரும் அஜித் உங்களிடம் பேச விரும்பவில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.மேலும் அஜித் வேண்டுமானால் குழந்தையின் கல்வி கட்டணமாக 10 ஆயிரம் கட்டச் சொல்லியுள்ளார்,’ என்று சுரேஷ் சந்திரா கூறியதாகவும் அதனால் தான் மனமுடைந்ததாக கூறியுள்ளார் பர்ஷானா. வேலையை இழந்த பர்ஷானா எவ்வளவோ முயன்றும் தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் வருந்தியுள்ளார். கணவர் டெய்லர், தனக்கு வேலையில்லை, கடன் தொல்லை, குழந்தைக்கான கல்வி கட்டணம் செலுத்த முடியாவில்லை என பல்வேறு மனஉளைச்சலால் மனம் உடைந்த பர்ஷானா, கடந்த ஏப்ரல் 1ம் தேதி, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டும், விஷம் உட்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

தற்கொலைக்கு முயன்ற பர்ஷானாவின் வழக்கு சென்னை வளசரவாக்கம் போலீசாரால் விசாரிக்கப்பட, அங்கு வந்த அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் இனி உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் உதவப்போவதில்லை என சொல்லிவிட்டதாகவும், 10 ஆயிரம் மட்டுமே தர முடியும் என கறார் காட்டியதாகவும் சொல்லி கண்ணீர்விடும் பர்ஷானா, இதனால் ஆத்திரம் அடைந்து ”நான் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை, இழந்துவிட்ட என் வேலையை மீட்டு தாருங்கள் என்றுதான் கேட்கிறேன்” என ஆவேசமாக பேச, அங்கிருந்து சுரேஷ் சந்திரா கிளம்பி சென்றதாக கூறியுள்ளார்

ஆனால், இந்த தகவலை அறிந்த அஜித் எக்காரணத்தைக் கொண்டும் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்று அந்த பெண் படிக்கும் பள்ளிக்கு ஓராண்டுக்கு தேவையான முழு கட்டணத்தையும் பள்ளியில் செலுத்திவிடுமாறு தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் கூறியிருக்கிறார். இதனால் சுரேஷ் சந்திராவும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அவரின் பெண் குழந்தை படிக்கும் பள்ளியின் வங்கிக்கணக்கு மற்றும் பள்ளியின் கட்டண விவரங்களை கேட்டு அதை செலுத்துவதாக கூறி இருக்கிறார். ஆனால் அந்தப் பர்ஸானா தனது வங்கிக் கணக்கை அனுப்பி அதில் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் சுரேஷ் சந்திரா பள்ளியின் கணக்கில்தான் பணத்தை செலுத்துவதாக கூறியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=TDQe6ZTVrP4

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் சுரேஷ் சந்திராவை அவதூறாக பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் அஜீத் மீதும் சுரேஷ் சந்திரா மீதும் அவதூறு பரப்புவதற்காக பர்சானா போலீசில் புகார் அளித்திருக்கிறார். பின்னர் இதனை விசாரித்து உள்ள போலீஸ் அதிகாரிகள் பர்சானாவின் நோக்கத்தை அறிந்து அவருக்கு புத்தி மதி சொல்லி எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதுபோக இந்த வழக்கையும் முடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியதாவது. மாதம் ஒரு ஐந்து பேருக்காவது சத்தமில்லாமல் உதவி செய்பவர் அஜித் ஆனால் இப்போது ஒரு பெண்ணிற்கு உதவி செய்யப் போய் அது உபத்திதிரமாக முடிந்துவிட்டது என்று அஜித் வருந்தியதாக கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full