சிகப்பு நிற குர்தா, வெள்ளை வேஷ்டியில் அஜித், மஞ்சள் நிற உடையில் ஷாலினி - வெளியான தல அஜித்தின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை படு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், பிரபலங்கள் பலரும் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில் தமிழ் சினிமாவில் அல்ட்டிமேட் ஸ்டாராக இருந்து வரும் அஜித் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.
அஜித்,ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 'அமர்க்களம்'. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை.
அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும்.
அதுவும் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால் அஜித் செல்பி எடுத்து தர மறுத்து விடுவார். அப்படி மீறி புகைப்படம் வருவது ரொம்ப அரிதான ஒன்று. அந்த வகையில் நேற்று தீபாவளி முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அஜித் சிகப்பு நிற குர்தா, வேஷ்டியையும் ஷாலினி ஒரு அழகான மஞ்சள் உடையையும் அணிந்துள்ளார்.