தென்னிந்திய திரைப்பட உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். அஜித் அவர்களின் நடிப்பில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஜெட் வேகத்தில் வெளியானது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில், ஆர்ப்பாட்டத்திலும் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது.அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்திலும் தயாரிப்பாளர் போனி கபூர் , இயக்குனர் வினோத் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் தல நடிப்பில் வெளியான “விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை” ஆகிய இரண்டு படங்களும் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் “தல 60” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

இதனைத் தொடர்ந்து அஜித் அவர்கள் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. மேலும்,இந்த படத்தின் கதை குறித்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி இணையங்களில் வருகிறது. ஆனால்,இயக்குனர் வினோத் அவர்கள் இது குறித்து கூறுகையில், இது என்னுடைய கற்பனை கதை தான் என்று கூறியிருந்தார். தல 60 படத்தில் அஜித் அவர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருந்தார். அதற்காக அவர் கடுமையாகவும், தீவிரமாக உடற்பயிற்சியில் இறங்கினார். மேலும், இந்த படத்தில் தல அஜீத் செம்ம மாஸாக இருக்க போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த படத்திற்காக அவர் அதிக உடற்பயிற்சி எடுத்து பிட்னஸ் ஆக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும், அவருடைய இந்த புதிய பிட்னஸ் லுக்கை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதையும் பாருங்க : பழைய வீடியோவை வைத்து மதுவின் கணவர் இறுதி போட்டிக்கு வந்ததுபோல ஜோடித்துள்ள விஜய் டிவி.! ஆதாரம் இதோ.!

Advertisement

இதுகுறித்து தல 60 படத்தில் அஜித் குமார் கார் ரேஸர் மற்றும் போலீஸ் அதிகாரியாக இருவேடங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த படத்திற்கு தல 60 என்று தற்போது பெயர் வைத்து உள்ளார்கள்.மேலும் தல 60 படத்திற்காக அஜித் குமார் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகான தோற்றத்திலும் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்காக தினமும் 6 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறாராம் அஜித். நீண்ட காலத்திற்குப் பிறகு அஜித்தின் தலை முடியை கருமையாகவும், இளமையான தோற்றத்தில் இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன .

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளத்தில் அஜித் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த உடன் தல ரசிகர்கள் தல 60 என்ற ஹாஸ்டேக்கை போட்டு தல கிளம்பிட்டார் என்று பல கருத்துகளை பதிவிட்டும் , மேலும் தல 60 படத்தை குறித்து அப்டேட்களை பதிவிட்டும் வந்திருந்தனர். பொதுவாக அஜித் ரசிகர்கள் அஜித்தை கடவுள் போல தான் பார்த்து வருகின்றனர். அதிலும் அவரை நேரில் கண்டால் சொல்லவா வேண்டும்.

Advertisement

சமீபத்தில் நடிகர் அஜித்தை டெல்லியில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள டெல்லிக்கு செல்ல விமான நிலையம் சென்றார். ரசிகர்கள் சிலர் ஏர்போட்டில் சந்தித்து உள்ளனர். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து அவரிடம் புகைப்படமும் எடுக்க முயன்றனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அஜித்தும் அவர்களுடன் புகைப்படம் எடுக்க நின்றார். ஆனால், அப்போது ரசிகர்கள் கடவுளே, கடவுளே என்று கோஷமிட்டனர். இதனால் கடுப்பானா அஜித், புகைப்படம் எடுப்பதை நிறுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.

Advertisement
Advertisement