ச்ச, என்ன ஜென்டில் மேன்யா, பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - வைரலாகும் வீடியோ. என்ன காரணம் தெரியுமா ?

By S.Dhilip Kumar · 25/12/2023

நடிகை பாவனாவிடம் அஜித் மன்னிப்பு கேட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு.

இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது.

விடாமுயற்சி படம்:

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. கடந்த மாதம் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்து விட்டார்.

https://twitter.com/sekartweets/status/1739123439255027971

படப்பிடிப்பில் நடந்த விபரீதம்:

இவருடைய இழப்பு அஜித் உட்பட பலரையும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. எல்லோரும் படப்பிடிப்பு நின்று விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. அதில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் இரண்டாவது வில்லனாக ஆரவ் நடிக்கிறார். இது தொடர்பாக அவர் சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து இருந்தார்.

படத்தின் கதை:

இந்த படத்தில் அஜித்- திரிஷா இருவரும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். திரிஷா காணாமல் காணாமல் போகிறார். பின் வில்லன் குரூப்பில் மாட்டிக் கொள்கிறார். கடைசியில் த்ரிஷாவை அஜித் கண்டுபிடித்தாரா?இல்லையா? என்பதே படத்தின் ஒன் ஆன்லைன் கதை என்று கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க அஜர்பைஜான் மட்டும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்ட அஜித்:

இந்த நிலையில் அஜர்பைஜான் படப்பிடிப்பில் பாவனா, அஜித்தை நேரில் சந்தித்தபோது எடுத்த வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், நீங்க இங்கு இருப்பது தெரியும். இருந்தாலும் உங்களை சந்திக்க லேட் ஆகிவிட்டது. ரொம்ப சாரி என்று பாவனா இடம் அஜித் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதற்கு பாவனா, நோ இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே, நீங்க லேட்டா வரீங்க சொன்னதால் நானும் கொஞ்சம் லேட்டாக தான் வந்தேன் என சிரித்துக் கொண்டே கூறி இருக்கிறார். பாவனா-அஜித் இருவருமே அசல் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full