கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இவர் ஒருத்தருக்கு மட்டும்தா கேரவன் - அஜித் தனியா இருப்பார். நடிகரின் வைரல் வீடியோ.

By Arun · 1/5/2022

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று (மே 1-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் '#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்' என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். இவர்களை போலவே தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகரான விஜய்யின் ரசிகர்களும் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது சர்ப்ரைஸாக இருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாடும் அஜித் :

அதே போல பல்வேறு பிரபலங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே அஜித்தை பற்றிய பல்வேறு அறிய விஷயங்களை தோண்டி எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நந்தா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது அஜித்துக்கு நடந்த விஷயம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை சமூக வளைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித் குறித்து நந்தா :

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நந்தா. அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை கூட பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது அஜித் குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனியாக இருந்துள்ள அஜித்:

அந்த வீடியோவில், தொகுப்பாளினி, நந்தா பதிவிட்ட அந்த குறிப்பிட்ட புகைப்படம் குறித்து கேட்கப்பட்ட போது பதில் அளித்த நந்தா, வாலி படத்திற்க்கு பின்னர் தான் அஜித் சாருக்கு ஒரு மாபெரும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்து. ஆனால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது அவருக்கு அந்த பெயர் இல்லை. அந்த படத்தின் போது ஐஸ்வர்யா ராய். மாமூட்டி எல்லாம் ஒன்றாக இருப்பார்கள் இவர் மட்டும் தனியாக இருப்பார்.

https://twitter.com/ajithFC/status/1256093906485141504

அஜித், வராண்டாவில் தான் சாப்பிடுவார்

அப்போது கேரவன் எல்லாம் வந்த புதுசு, அப்போ ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் தான் கேரவன். மற்றபடி மம்முட்டி, அப்பாஸ், அஜித் என்று யாருக்கும் கேரவன் இல்லை. அதனால் அங்கே காரைக்குடி வீட்டில் பெரிய டைனிங் ஹாலில் தான் படத்தில் பணிபுரிந்த அந்த முக்கிய 25 பேரும் சாப்பிடுவோம். அப்போது கூட அஜித், வராண்டாவில் தான் சாப்பிடுவார். அங்கே ஒரே ஒரு அசிஸ்டன் உடன் தான் அவர் அமர்ந்து சாப்பிட்டார் என்று கூறியுள்ளார் நந்தா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full