அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் நடனமாடிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான்.

இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம். உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்ப காலத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி வசனங்களை பேசி இருக்கின்றனர்.

விஜய்-அஜித் குறித்த தகவல்:

மேலும், கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் தான் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இதுதான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல், கடைசி படம். தற்போது இருவருமே படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் லியோ. இப்படத்தில் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள்.

Advertisement

விஜய் கோட் படம்:

விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

Advertisement

அஜித் படங்கள்:

தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோட் படத்தின் டீசர் அல்லது முதல் சிங்கிள் லிரிக் வெளியாகி இருந்தது. சோசியல் மீடியா முழுவதும் கோட் பட பாடல் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேபோல் அஜித் அவர்கள் கடைசியாக வினோத் இயக்கத்தில் வெளியாகி இருந்த துணிவு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு வருகிறார்.

விஜய்-அஜித் நடன வீடியோ:

இந்த நிலையில் அஜித்- விஜய் உடைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாக இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்று இருந்தது. இந்த பாடலுக்கு விஜயுடன் அஜித் இணைந்து நடனம் ஆடும் வீடியோவை ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Advertisement