அஜித் மகளா இது..!இப்படி கிடுகிடுன்னு வளர்ந்துட்டாங்க..!

By Rajkumar · 24/10/2018
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ''விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித். பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார். சமீபத்தில் நடந்த தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்து கொண்டிருக்கும் 'விசுவாசம்' பட கெட்டபில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.அதே போல தனது மகள் அனோஷ்காவை சந்திக்க பள்ளிக்கும் சென்றிருந்த வீடியோவும் வைரலாக பரவியது. ஆனால், அந்த விடியோவில் அனோஷ்காவை காண முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது மகள் அனோஷ்காவுடன் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியது. அதில் அனோஷ்கா மிகவும் வளர்ந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனோஷ்காவா இது என்று வாயடைத்து உள்ளனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full