'தலைக்கு edit தேவை இல்லமா' - சொல்லியும் நம்பாத கழுகு நடிகர். Original புகைபடத்தை போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.

By Rajkumar · 26/12/2022

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது.

துணிவு படம்

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

https://twitter.com/Aamai_Kuttan/status/1607287838844006403

அடிக்கடி வெளியாகும் அஜித் போட்டோஸ் :

அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இல்லை என்பது அனைவரும் அறிந்து ஒரு விஷயம் தான். ஆனால், சமீப காலமாகவே அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சமீப காலமாகவே நடிகர் அஜித் அடிக்கடி பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் பைக் பயணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதே போல துணிவு படத்தின் புகைப்படங்களும் அடிக்கடி வெளியானது.

https://twitter.com/Sathees_sanoj/status/1606487620644921344

எடிட் செய்யப்பட்ட புகைப்படம் :

அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பெரும் வயதானது அந்த புகைப்படத்தில் வெள்ளை சட்டை அணிந்து கூலிங் கிளாஸ் உடன் அஜித் கிளாஸ் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்து அஜித்தின் அழகை வர்ணித்தார்கள் அந்த வகையில் விஷ்ணுவர்தன் சகோதரரும் கழுகு பட நாயகனுமான கிருஷ்ணாவும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

https://twitter.com/daexshiv/status/1606465401936056320

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

இப்படி ஒரு நிலையில் பிட்டர் வாசி ஒருவர் இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு தலைக்கு என்றும் போட்டோஷாப் தேவை கிடையாது என்று கிருஷ்ணா கூறியிருந்தார். ஆனால், உண்மையில் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று இந்த புகைப்படத்தில் உண்மையாக இருக்கும் நபரின் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து கிருஷ்ணாவின் இந்த பதிவை கலாய்த்து வருகிறார்கள். அது யாருடைய புகைப்படம் என்று நீங்களே பாருங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full