ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் - வைரல் வீடியோ. பாவம் இந்த புள்ள என்ன பண்ணும்.

By Rajkumar · 28/2/2021

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்..இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.

https://www.youtube.com/watch?v=128FtstC-Z8&feature=youtu.be

இதை தொடர்ந்து 'வலிமை' பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 15 ஆம் தேதி நிறைவடைகிறது எனவும், ஓரிரு காட்சிகள் மட்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போனி கபூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். வலிமை படத்தின் அப்டேட்டை சம்மந்தமே இல்லாமல் இடங்களில் கேட்ட தனது ரசிகர்களின் செயல்பாடுகள் தனக்கு வருத்தமளிக்கிறது என்று அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அப்போதும் அடங்காத அஜித் ரசிகர்கள் இன்னமும் யார் யாரிடமோ வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சூப்பர் சிங்கர் மற்றும் குக்கு வித் கோமாளி புகழ் ஷிவாங்கி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடமும் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அதற்கு ஷிவானி, வலிமை அப்டேட்டா, அது பத்தி எனக்கே தெரியாதே என்று ;கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full